வாலிபனே வாலிபனே

 

 

வாலிபனே வாலிபனே

இயேசுவுக்காய் நீ எழுந்துவா

எழுந்து கட்டுவோம் நீ எழுந்துவா

எடுத்து கட்டுவோம் நீ துணிந்துவா

 

 

தேசங்கள் பாழாய் போகுதே

பாவங்கள் திரளாய் பெருகுதே

பாதாளம் வாரிக்கொள்ளுமுன்

தடுத்து நிறுத்த நீ எழுந்துவா - எழுந்து கட்டுவோம்

 

அலங்கம் இடிந்து போனதே

குடிகள் சிறுமை அடைந்ததே

எதிரியின் சேனை தாக்குமுன்

மதிலாய் நிற்க நீ எழுந்துவா   - எழுந்து கட்டுவோம்

 

தரிசனம் காண் நீ வாலிபா

பெலவான் கையின் அம்பு நீ

கூர்மையான புதிய எந்திரம் நீ

போரடிக்க நீ எழுந்து வா   - எழுந்து கட்டுவோம்